Thursday 26 July 2012

புதுக் கவிதை

காதல்

வித்தகன்
உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!



கண்டதும் காதல்

வித்தகன்
முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்!



காதல் ஏக்கம்

வைஷ்ணவி
உன் வியர்வை நாற்றம் கூட
எனக்கு சுகம் தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!!



பெண்மைக்கு வணக்கம்

வித்தகன்
பெண்ணே உன்னால் பிறவி கொண்டேனே,
வளர்பிறையாய் நான் வளர,
தேய்பிறையாய் நீ மறைந்தாயோ?
இடைவெளியாய் இருளை நான் உணர,
தாரமாய் மீண்டும் வந்தவள் நீதானோ?
தாரம் தந்த இன்பத்தில்,
தலைமைகளை கொண்டேனோ?
என் தாயை மீண்டும் கண்டேனோ?
தரை தவழ்ந்த முதல்,
தலை நரைத்த வரை,
ஈன்ற தாயாய்,
ஈசனில் பாதியை,
ஈன்றெடுத்த மகளாய்,
பேரு கொண்ட பெண்மைக்கு,
என் தமிழை கொண்டு தலை வணங்குகிறேன்!



என் காதலி

கவிதன், மதுரை
நித்தம் நித்தம் என்னுள்ளே
நிம்மதி தந்து போனவளே!
சித்தம் மொத்தம் என்னுள்ளே
சிலையாய் வந்து நின்றவளே!
கலைகள் மொத்தம் கற்றுண்டு
கண்ணடி வித்தை செய்தவளே!
எந்தன் கவிதை நீ கேட்டு
நில்லடி கொஞ்சம் என்னவளே!
பாலை மணல்கள் பறந்தோட
காற்றும் கொஞ்சம் அனலாட
நினைவில் நீயே விளையாட
எந்தன் நாவும் உன் கவிபாட
கேளடி கொஞ்சம் என்னவளே!
என் நெஞ்சமதில் நீ வந்து
தஞ்சமதை நான் தந்து
பஞ்சமில்லா பாரினிலே
கஞ்ச முத்தம் தந்தவளே!
மிச்சம் எப்போ என்னவளே!
உன் பாதம் பட்ட வாசல்படி
பூக்கள் கொஞ்சம் கேட்டதடி
பூக்கள் அதை நான் தூவ
புன்னகையில் பூகூட
பூப்பெய்தி விட்டதடி!


  view-  http://www.koodal.com/poem/tamil




No comments:

Post a Comment